கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற  மாணவியே காணாமல்போயுள்ளார்.

குறித்த  மாணவி இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் தனது மகளை எங்கு தேடியும் காணவில்லை என்பதால்  சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.