நுகர்வோர் சட்டத்தை மீறிய 1500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இதுவரை 1800 வர்த்தக நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போதே குறித்த 1500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சோதனை நடவடிக்கையானது எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலவாதியான பொருட்கள் விற்பனை செய்தல், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் ஆகியன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவதுடன், இதற்காக மாவட்ட ரீதியாக விசேட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.