பண்டிகைக் காலங்களில்  மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான ஒரு இலட்சம் பரிசோதனை பலூன்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பண்டிகைக் காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை சுழவுள்ள பகுதியில் மேலதிகமாக 1000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வீதியின் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.