கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப போட்டிப் பரீட்சை நடத்தி நேர்முகத் தேர்வு நடத்திய பின்னரும் நியமனங்கள் வழங்கப்படாமையால் எதிர்கட்சித் தலைவரிடம் பரீட்சாத்திகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிறப்புவதற்கான போட்டிப் பரீட்சை நடத்தபட்டு பரீட்சை பெறுபேறுகளையும் மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய நியமனங்கள் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடாத்தபட்டு ஒன்டறை மாதங்காகியும் இது வரை இந்நியமனங்கள் வழங்கப்படாதுள்ளது.

நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் கிழக்கு மகாணத்தின் சுகாதார அமைச்சில் நியமனங்கள் வழங்காது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர்.

  1. இது குறித்த பரீட்சாத்திகள் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் எழுத்து மூலமாக  முறையிட்டுள்ளனர்.