லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த பகுதியில் நேற்று மாலை  6 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சிறுமி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமரிக்கப்பட்டுள்ளார். 

அக்கரகந்த பகுதியில் டயகம - தலவாக்கலை பிரதான வீதியில் வீட்டுக்குச் செல்வதற்காக விதியை கடக்க முயன்ற 7 வயது சிறுமி மீது டயகம பகுதியில் இருந்து தலவாக்கலை நேர்ககி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதனால் படுகாயமடைந்த சிறுமி லிந்துலை வைத்திய்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். 

அதன் பின்னர் அங்கிருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு இன்று (10) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்