ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்தப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குமிடையே சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.