கடந்த யுத்த காலத்தில் இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண ஆளுர் ரோஹிந்த போகொல்லாகம தலைமையில் காணி விடுவிப்பு  தொடர்பான வைபவம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தின் கட்டிக்குளம், தோப்பூர், சூரியபுரம் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் கிழக்கு கட்டளைத் தளபதி அருண ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.