இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களில்  சவூதியில் இருந்து 12 பேரும் குவைத்திலிருந்து 48  பேரும் கட்டாரிலிருந்து 12 பேரும் வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வந்தவர்களில் 22 பேர் ஆண்களும் 50 பேர் பெண்களும் அடங்குவர். இவர்கள் காலி, பொலன்னறுவை,குருணாகல், மட்டக்களப்பு,  மற்றும் ஏறாவூர் பிரதேசங்களை சேந்தவர்கள் .

நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.