கர்ப்பிணி காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ள இறந்த பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ள சம்பவமொன்று நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரின்ஸ் ஒவாபி என்ற இளைஞரும் பெர்தா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெர்தா கர்ப்பமடைந்தார். இதன்போது, பிரின்ஸ் வீட்டுக்கு பெர்தா வந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பெர்தாவை கொலை செய்த பிரின்ஸ் சடலத்தை தனது வீட்டிலேயே புதைத்தார்.

இந்நிலையில் பெர்தாவின் தந்தை வெல்ப்ரிட் மகளை காணவில்லை என பொலிஸ் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் பிரின்ஸ் வீட்டில் பெர்தா கொன்று புதைக்கப்பட்டதை கண்டுப்பிடித்து சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகளின் சடலத்தை பிரின்ஸ் முழு பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பெர்தாவின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.