லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டு பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த 6 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உன்னது.. அந்தப் பகுதியை கடந்த ஆண்டு ராணுவம் கைப்பற்றி. ஐ.எஸ் அமைப்பினரை விரட்டியடித்தனர். அதன் பின்னர் அந்தப் பகுதியில் அவ்வப்போது ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதலுக்குப் பின்னர் 10 பேரைத் தீவிரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு ராணுவ வீரர்களைக் கொன்றதாகவும், சிலர் கடத்திச் சென்றதாகவும் ஐ.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரைத் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

ஐ.எஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் ராணுவத்திடம் உள்ள தீவிரவாதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.