பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காது இலங்கை நழுவியுள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையொன்றை ஐ.நா.பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்திருந்தது. இந்த தீர்மானத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காதமையினால் பிரேரணை தோல்வியைத் தழுவியுள்ளது.

அதன்படி பொதுச் சபையின் 86 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 57 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்த அதேவேளை இந்தியா, இலங்கை உள்ளிட்ட 33 நாடுகள் வாக்களிக்காது நடுநிலை வகித்தன.

ஆகையினால் இப் பிரேரணையானது மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோல்வியைத் தழுவியது.