சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

ஜமால் கசோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 11 நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய ஜனாதிபதி சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந் நிலையில் தமது நாட்டின் பிரஜைகளை நாடு கடத்துவதில்லை என தெரிவித்து சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார்.  

அத்துடன் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பிப்பதற்கும் துருக்கி நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நடவடிக்கை எடுத்திருந்தமை‍ குறிப்பிடத்தக்கது.