பிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்

Published By: Vishnu

10 Dec, 2018 | 09:22 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வடிகான் ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றையவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து சம்பவத்தில் களுதாவளை வன்னியனார் வீதியை சேர்ந்த வேலுப்பிள்ளை தீசன் (38வயது) என்பவரே உயிரிழந்துள்ளதுடன் அதேவீதியை சேர்ந்த கு.ஜெகதீஸ்வரன்(35வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்த நாளான இன்று தீசன் தனது பிறந்த நாளை கொண்டுடாடுவதற்காக கல்முனைக்கு கேக் வாக்குவதற்காக சென்று திரும்பிய நிலையிலேயே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49