இதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தான்தோன்றித் தனமாக செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது 19 ஆம் திருத்தத்தில் கை வைத்துள்ளதுடன், அதனை திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  செயற்குழுக் கூட்டம், இன்று வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.