புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசியல் தீர்வொன்றை அடைவதற்கான நம்பிக்கை எமக்குள்ளதோடு அதுகுறித்து சிந்திப்பவர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றோம்.  இலக்குகளை அடைவதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து பயணக்க விரும்புகின்றோம். நாங்கள் யாரையும் பகைக்க விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டார். 

அவர் வழங்கிய அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- அரசியல் நெருக்கடிகளின் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தீர்மானிக்கும் சக்தியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கட்சிகளுடனான அனுகுமுறைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனவே?

பதில்:- எங்களுடைய அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாங்கள் செயற்பட வேண்டியது அவசியம். அதனையே நாம் குறிக்கோளாக முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். பலருக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்க முடியும். அதற்காக அனைவரினது கருத்துக்களையும் உள்வாங்கி எம்மால் செயற்பட முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அத்தியாவசிய தேவையாக உள்ளது அரசியல் தீர்வாகும். அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டியுள்ளது.

எமது மக்கள் நீண்டகாலமாக அச்சமான சூழலில் வாழ்ந்தவர்கள். அச்சூழல் அண்மைக்காலமாக மாறியிருந்தது. எனினும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் அச்சமான சூழலொன்று தோற்றம்பெற்றுள்ளது. ஆனாலும் நிலைமை இன்னமும் மோசமடையவில்லை. ஊடகங்கள்ரூபவ் அரச திணைக்களங்கள்ரூபவ் பொலிஸ்ரூபவ் நீதித்துறை ஆகியன சுதந்திரமாக செயற்பட வேண்டும். இராணுவத்தினது தலையீடுகள் இல்லாதுபோக வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிப்படை தீர்வாக அமைவது நிரந்தரமான பாதுகாப்பான அரசியல் தீர்வொன்றை பெற்றுள்வதேயாகும்.

அரசியல் நிலைமைகள் காலத்திற்கு காலம் மாற்றமடையலாம். எமக்கு எந்தவொரு கட்சியுடனும் இணைய வேண்டும் என்ற திடமான அபிப்பராயம் கிடையாது. எமது கருமங்களை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மஹிந்த ராஜபக்ஷயும்ரூபவ் அவருடைய கட்சியைப் பற்றியும் எமக்கு நன்கு தெரியும். 2005முதல் 2015வரையிலான அவருடைய ஆட்சிக்காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக போதியளவு அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றோம்.

அரசியல்தீர்வு குறித்து மிகவும் விசுவாசமாக அவடனும் பேச்சுவார்த்தை நடத்தயிருந்தோம். நியாயமாக பேச்சுவார்த்தையை நடாத்தி குறிப்பிட்ட வரையறைகளுக்குள் தீர்வினைக்காண்பதற்கு அவருக்கு அடிப்படையில் விருப்பம் இருந்திருக்கவில்லை. தவறு எங்களுடையதல்ல. அவரைப்பொறுத்தவைரயில் தமிழர்களின் தலைவர்களாகரூபவ் டக்ளஸ், கருணா. பிள்ளையான் போன்றவர்கள் தான் இருக்க வேண்டும் என்றே கருதுகின்றார்.

தற்போது சிக்கலான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு தமழர்கள் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளார் என்பதை ஜனாதிபதியும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஐ.தே.க கட்சியைப் பொறுத்தவரையில் கூட்டு அரசாங்கம் இருந்த காலத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக கருமங்கள் தாமதமடைந்திருந்தாலும் பல கருமங்கள் நடைபெற்றிருக்கின்றன.

புதிய அரசியல் சாசனத்திற்கான இடைக்கால அறிக்கை வந்துள்ளதோடுரூபவ் சென்ற மாதம் ஏழாம் திகதி முழுமையான அறிக்கையும் வரவிருந்தது. ஆகவே நாம் கணிசமான அளவு பயணித்திருக்கின்றோம்.

கேள்வி:- 2015இல் இருபிரதான கட்சிகளும் கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருந்த தருணத்தில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதிலிருந்து அவர்களால் விலக முடியாது என்று கூறி அவர்களின் ஆட்சிக்கு ஆதரவளித்திருந்தீர்கள். தற்போது அவர்களுக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கடையில் பாதுகாப்பான அரசியல்சாசனமொன்றை உருவாக்கி நியாயமான அரசியல் தீர்வொன்றை பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் இன்னமும் இருக்கின்றீர்களா?

பதில்:- நம்பிக்கை என்பது வேறுவிடயம். எமக்கு என்று இலக்குகள் உள்ளன. அந்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும். தற்போது ஐ.தே.கவைப்பொறுத்த வரையில் அவர்கள் அந்தப்பாதையிலேயே தொடர்கின்றார்கள். ஜனாதிபதியும் அவ்வாறான பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு தயார் என்றே கூறுகின்றார். ஆனால் இவர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகின்றது.

மஹிந்த அணியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் முற்போக்கான தீர்மானத்தினை எடுப்போம் என்று கூறுகின்றார்கள். இவ்வாறானவர்களுடன் நாம் தொடர்புகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். யாரையும் பகைப்பதற்கு விரும்பவில்லை. மேலும் இத்தகைய தரப்பினர்கள் மீது நம்பிக்கை கொள்ளாது விடமுடியாது. அவர்கள் உண்மையாகச் செயற்படுவார்களோ என்பது எனக்குத் தெரியாது. அதற்காக அவர்களை உதாசீனம் செய்ய முடியாது. நம்பிக்கை இழப்பதாலோ உதாசீனம் செய்வதாலோ என்ன பயன் ஏற்படப்போகின்றது.

ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுத்து நான் ஒரு தீவிரவாதி.போர்க்கொடி தூக்குவதற்கு தயாராக இருக்கின்றேன் என்று பகிரங்கப்படுத்தி பிரபல்யம் அடைந்துகொள்ள முடியும். அதனைவிட வேறு என்ன நன்மை கிட்டப்போகின்றது. ஆகவே நாம் எவரையும் பகைக்காது எம்முடன் ஒத்துவரக்கூடியவர்களை சிநேகபூர்வமாக அனுகி எமது பிரதான கருமத்தினை முன்னெடுக்க வேண்டும். 

நபர்களை முன்னிலைப்படுத்தி நாம் செயற்படவில்லை. அனைவரையும் இணைத்துக்கொண்டு எமது கருமங்களை முன்னெடுக்க வேண்டும் என்றே கருதுகின்றோம். அரசியல்தீர்வு தொடர்பாக கணிசமான கருமங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனை அனைவரும் அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. அதில் பங்கெடுத்தவர்களுக்கே அவ்விடயம் முழுமையாக தெரியும். எமது நிலைப்பாடானது நியானமானதும் அடையக்கூடியதுமாகும். அந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம்.

கேள்வி:- ஜனநாயகத்தினை பாதுகாத்து சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி அமைதியான சூழல் திரும்புவதற்காக ஒக்டோபர் 26இற்கு முன்பிருந்த நிலைமைகளை மீண்டும் ஏற்படுத்துவதற்காக ஐ.தே.மு.அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக தாங்கள் கூறினாலும்ரூபவ் ஐ.தே.கவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கருத்துக்களும் உள்ளன. அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்தீர்களா?

பதில்;:- இவ்வாறான கருத்தினை உதய கம்மன்பில தவிர்ந்த வேறுயாரும் கூறவில்லை. நாம் ஐ.தே.கவுடன் எவ்விதமான ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. அவ்வாறான எந்த தேவையும் எமக்கு இல்லை. நாம் அனைவருடனும் பேசுகின்றோம். மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசினோம். அவருடைய புதல்வர்கள் எனது வீட்டுக்கு வந்து பேச்சுக்களை நடத்தினார்கள். இவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. 

கேள்வி:- ஐ.தே.மு அரசாங்கம் ஆட்சியமைவதற்கு தாங்கள் ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கின்றீர்களே அதற்கு முன்னதாக வாய்மொழியிலான இணக்கப்பாடேனும் அத்தரப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

பதில்;:- பிரதமானமாக அரசியல் தீர்வு எவ்வாறு எத்தகைய காலப்பகுதிக்குள் அமைய வேண்டும் என்பது பற்றி பேச்சுக்களை நடத்தியுள்ளோம். ஆனால் அதுசம்பந்தமாக தற்போதைக்கு பகிரங்கமாக கூறுவதற்கு நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வு குறித்த இறுதி வடிவம் வருகின்றபோது அது நியாயமாக இருந்தால் அதனை மக்கள் மத்தியில் முன்வைத்து நாம் தெளிவுபடுத்துவோம். அதற்கு முன்னதாக பகிரங்க கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை. குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல எம்மத்தியிலும் இருகின்றார்கள். அவர்களுக்கு நாம் தீனிபோட்டு விடக்கூடாது.

கேள்வி:- சொற்ப அதிகார பகிர்வுடனான அரசியல் சாசனத்திற்காக விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட தென்னிலங்கை தலைவருக்கு கூட்டமைப்பு முண்டுகொடுப்பதாக வடகிழக்கில் கடும் விமர்சனம் செய்யப்படுகின்ற அதேநேரம்  தென்னிலங்கையில் சமஷ்டி தீர்வுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. இவ்வாறான இருவேறு நிலைமைகளில் தங்களின் இலக்கு நோக்கிய முன்நகர்வு சாத்தியமாகுமா?

பதில்:- முன்னோக்கிய நகர்வு குறித்து எனக்கு நம்பிக்கை இருக்கின்றதா இல்லையா என்பது ஒருவிடயம். ஆனால் வடக்கில் உள்ளவர்களுக்கோ அல்லது தென்னிலங்கையில் உள்ளவர்களோ அடிபணிந்து கருமங்களை கைவிட்டுச் செல்வதா எனது கடமை. அவ்வாறு செய்வதானது மிகப்பெரும் தவறாகும் என்பதை நீங்களும் அறிவீர்கள். தெளிவாகச் சிந்திக்கின்ற மக்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட இரண்டு விடயங்களுமே தவறு என்பதை அறிவார்கள்.

கேள்வி:- நான் குறிப்பிட்ட இரு கருத்துக்களில் தென்னிலங்கை மக்களிடத்தில் தெரிவிக்கும் கருத்தினை அவர்கள் ஏற்றுக்கொண்டால் கடும்போக்காளர்களே எதிர்கால அரசியலில் நீடிக்கும் வாய்ப்புக்களே அதிகமாகும். அதேபோன்று வடகிழக்கில் கூறப்படும் கருத்தினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டால் அது தேர்தல்களில் உங்களுக்கு  பின்னடைவினை நிச்சயம் ஏற்படுத்துவதாக இருக்கும்.ஆகவே இது கூட்டமைப்புக்கு முன்னால் உள்ள மிகப்பெரும் சவால்களாக கருதுகின்றீர்களா?

பதில்;:- அரசியல் தீர்வொன்று வெளியானதும் அது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். அவர்களிடத்திலிருந்து ஒழித்து எதனையும் செய்ய முடியாது. அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அதனை நாட்டுக்கு முன்னால் வைப்போம். நிதானமான இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கான பிரசாரத்தினை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே அரசியல் தீர்வு வெளியாகின்றபோது அது நாட்டைப்பிரிக்கின்றதா? இல்லை அற்பசொற்ப அதிகாரங்களை உடையதா? என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். விமர்சனம் செய்பவர்கள் அல்ல. தமிழர்களின் பிரச்சினைகள் எழுபது வருடங்களாக தீர்க்கப்படாதிருக்கின்ற விடயமாகும். எமது மக்களும் மிகப்பொறுமையாக இருந்துள்ளார்கள். நாடு சுதந்திரமடைவதற்கு முன்னதாக இவ்விடயங்கள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நாடு சுதந்திரமடைவதற்கு முன்னதாக கண்;டியத்தலைவர்கள் சமஷ்டிகோரியபோது யாழ்பாண இளைஞர் சமுகம் “பூர்ண சுவராஜை“ கோரியது. அதேபோன்று சுதந்திரமடைவதற்கு முன்னதாக ஐம்பதுக்கு ஐம்பதை கோரினோமே தவிர பிராந்திய சுயாட்சியைக் கோரியிருக்கவில்லை. நிதானத்திற்கு அப்பால் சென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் விளைவுகளைத்தான் தற்போது நாம் தாங்குகின்றோம். ஆகவே அந்த விடயங்களை மனதில் கொண்டு தற்போதாவது நிதானமாக அனுக வேண்டும்.

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று கூறும் ஜனாதிபதி கூட்டமைப்புடனான சந்திப்பின்போது நெகிழ்வுப்போக்கினை காட்டுகின்றாரா?

பதில்;:- இல்லை. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தான் திடமாகக் கூறுகின்றார். 

கேள்வி:- கூட்டமைப்புக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையிலான சந்திப்புக்களில் ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்து பிறிதொருவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறதா?

பதில்:- அவ்வாறில்லை. அவர்களும் ரணில் விக்கிரமசிங்கவையே மீண்டும் பிரதமாராக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். 

கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாட்டை கோரியதைப்போன்று ரணில் விக்கிரமசிங்கவிடத்திலும் எழுத்துமூலமான உறுதிப்பாட்டினைப் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுத்தப்படுகின்றதே?

பதில்:- எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால் தென்னிலங்கையில் நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்வதென்றாலும் அதனை பகிரங்கமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்கான தேவை எமக்கு இல்லை. 

கேள்வி:- உயர்நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதில் காணப்படும் இழுபறி முடிவுக்கு வந்து பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறும் என்று எதிர்பார்கின்றீர்களா?

பதில்:- இருதரப்பினதும் இறுக்கமான நிலைப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் சுமுகமான நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கை எவருக்கும் இருக்க முடியாது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவால் பாராளுமன்ற பெரும்பான்மமையை காண்பிக்க முடியாது போய்விட்டது. அவருக்கு எதிராகவும் அவரது அரசுக்கு எதிராகவும் இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத பிரேரணையும் நிறைவேற்றப்பட்டு விட்டது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை இல்லை என்பது நாட்டுக்கும்ரூபவ் சர்வதேச  சமுகத்திற்கும் நன்றாக தெரியும்.

ஆனாலும் இந்த நாட்டில் ஜனநாயகமும்ரூபவ் அமைதியும் கொண்ட ஸ்திரமான அரசியல் நிலைமகளையே அனைத்து மக்களும் எதிர்பார்கின்றார்கள் என்ற அடிப்படையில் எமக்கும் கடமைகள் இருந்தன. 14உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நாம் அந்தக்கடமையின் அடிப்படையில் தான் நாம் ஒருமுடிவை எடுத்து ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தோம். இதுதான் தற்போதைய சூழலில் எம்மால் செய்யக்கூடிய ஒரேவழிமுறையாகும்.

உயர்நீதிமன்றத்திடமிருந்து பாராளுமன்ற கலைப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷ பிரதராக செயற்படுவதும் அவருடைய அமைச்சரவை இயங்குவதும் குறித்து இரண்டு தீர்வுகள் வரவுள்ளன.அதன்  பின்னர் கதவுகள் திறக்கப்பட்டு மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதுகின்றேன். எதிர்வரும் நாட்களில் தலைவர்களின் சிந்தனையில் மாற்றம் வரும் என்று கருதுகின்றேன். ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து தற்போது எதுவும் கூறுவதற்கு இல்லை.

கேள்வி:- உள்நாட்டில்; தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் சர்வதேசத்தின் ஊடாக அனைத்துவிடயங்களுக்குமான தீர்வினைப் பெற்றுக்கொள்வோம் என கூட்டமைப்பு  பலசந்தர்ப்பங்களில் கூறியிருந்த வந்திருந்த நிலையில் இராஜதந்திரிகளுடான  சந்திப்பு எவ்வாறமைந்திருந்தது?

பதில்:- நாங்கள் 14நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளை சந்தித்திருந்தோம். அவர்களிடத்தில் எமது நியாயமான கோரிக்கை முன்வைத்திருந்தோம். அவர்கள் தொடர்ச்சியாக கருமங்களில் ரூடவ்டுபட்ட வண்ணமே உள்ளார்கள். ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகள் தமது கருத்துக்களை முன்வைத்த வண்ணமே உள்ளன. தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை முன்வைப்போம்.

கேள்வி:- ஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய தரப்புக்களுக்கு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு முடியாத நிலையில் தான் நீதிமன்றத்தினை நாடியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றதே?

பதில்:- தேர்தலை அறிவிப்பதற்கு ஒழுங்குமுறையொன்ற உள்ளது. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டு மஹிந்தராஜபக்ஷவை நிராகரித்து 2020வரையில் மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னதாக தேர்தல் வந்தால் சந்திப்பதற்கு தயாராகவே உள்ளோம். நாம் ஒழியப்போவதில்லை.

கேள்வி:- தற்போதைய சூழலில் தேர்தலொன்று நடைபெற்றால் வடக்கு கிழக்கில் புதிதாக உருவாகி வருகின்ற கூட்டுக்கள் கூட்டமைப்பு சவாலாக அமையும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இலங்கை ஒரு ஜனநயாக நாடு. எவருக்கும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உண்டு. கட்சி ஆரம்பிக்கலாம். கொள்கைகளை பரப்பலாம். ஆதனை செய்ய வேண்டாம் என்று என்னால் கூறமுடியாது. அதனால் அவ்விடயம் தொடர்பில் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. 

கேள்வி:- ஒக்டோபர் 26இற்கு முன்னதான நிலைமைகளை மீள ஏற்படுத்துவதென்றால் கூட்டமைப்பின் வகிபாகம் எவ்வாறு அமையும்?

பதில்:- தற்போது அரசாங்கத்தினை உருவாக்க வேண்டிய நிலைமையில் நாம் இருக்கின்றோம். அதுதொடர்பான முடிவொன்றை எடுத்த பின்னர் எமது பயணம் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் முடிவெடுப்போம்.

கேள்வி:- அரசாங்கமொன்றை அமைப்பதென்றால் அதில் கூட்டமைப்பின் பங்களிப்பும் இருக்குமா? இல்லை வெளியிலிருந்தே தான் ஆதரவுக்கரம் நீட்டப்படுமா?

பதில்:- அதுகுறித்து காலப்போக்கில் முடிவெடுப்போம்

 நேர்காணல்:- ஆர்.ராம்