இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ரிக்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகால பயிற்றுவிப்பு அனுபவத்தை கொண்டுள்ள ரிக்சன் தற்போது நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் இணையவுள்ளார்

நாங்கள் ஸ்டீவை அணிக்குள் வரவேற்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் என இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி  ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்

ரிக்சன்  2019 உலக கிண்ணப்போட்டிகள் வரை அணியுடன் இணைந்திருப்பார்.

ரிக்சன் பாக்கிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக  பணியாற்றியதுடன்  அந்த அணியின் களத்தடுப்பினை திறனாக மாற்றியவர் என கிரிக்கெட் உலகில் குறிப்பிடப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.