யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில்   பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. 

செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது-53) என்பவரே கையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.