தெற்காசிய நாடுகளில் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கல்லீரல் பாதிப்பு நோயிற்கு ஆளாகிறார்கள். இவர்களில் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களைக் காட்டிலும் நாற்பது வயது முதல் அறுபது வயதிற்குட்டபட்டவர்களுக்கு தான் அதிகளவில் கல்லீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது.

மது அருந்துவதால் தான் கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும், அதனால் மது அருந்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

அதே போல் நீண்ட நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, உடற்பயிற்சியேயில்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிக்கப்பட்டால் அதன் அறிகுறி வெளிப்படுத்துவது குறைவு என்பதால் அதனை தொடக்க நிலையில் கண்டறிய முடியாத நிலையேயிருந்தது.

ஆனால் தற்போது நவீன சிகிச்சை மற்றும் கருவிகளின் மூலம் கல்லீரல் பாதிப்பின் தொடக்க நிலையைக் கண்டறிந்து சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். அதே போல் கல்லீரல் பகுதியில் கொழுப்பு சேர்வதால் தான் கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்படுகிறது. இதனையும் தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும்.