அரசாங்கத்தால் இது வரையில் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தீர்மானித்துள்ளார்.

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் பஸ்ஸின் ஏனைய உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எரிபொருட்கள்  விலை குறைக்கப்பட்டதால் 100க்கு 3 வீதம் மாத்திரம் குறைக்க முடியும் ஆனாலும் உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால்  பஸ் கட்டணம் 100க்கு 3 வீதம்  கூட குறைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தின் குறைப்பு சம்பந்தமாக  தீர்மான எடுப்பதற்கான  கலைந்துரையாடல் ஒன்று இம்மாதம் 21 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணையத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.