ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று 4 ஆவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்றது.
ஏற்கனவே உயர் நீதிமன்றினால் குறித்த மனுக்களை விசாரணை செய்ய நிர்ணயிக்கப்பட்ட மூன்று நாட்களும் நேற்றுடன் நிறைவடைந்த போதும், விசாரணைகள் நிறைவடையாததால் இன்று நான்காம் நாளாகவும் விசாரணைகளை தொடர் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இந் நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்று நிறைவடைந்த நிலையிலேயே, தீர்ப்பு அறிவிக்கப்படும வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் இம்மனுக்கள் விசாரிக்கப்ப்ட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM