(இரோஷா வேலு) 

சென்னையிலிருந்து கடத்திவரப்பட்டு தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பிரிவு தெரிவித்தது. 

36 வயதுடைய கல்கமுவை குருநாகலைச் சேர்ந்த ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை கைதுசெய்த வேளையில் அவரது பயணப்பொதியிலிருந்து 233.25 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகள் மூன்று மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 2,448,600 ரூபா பெறுமதியுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.