நாடு இன்றிருக்கும் சூழ் நிலையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு அதிமேதகு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மீரா ஜும்ஆ  பள்ளிவாயலின் ஜூம்மா தொழுகையை தொடர்ந்து பள்ளிவாயலின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி , ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிலானோர் கலந்து கொண்டிருந்ததுடன், உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வழியுறுத்தியவாறான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.