(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் அல்ல கிராமிய நலன்புரி உறுப்பினராவதற்க கூட தகுதி கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின்  தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகம் பற்றி தற்போது பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்   சஜித் பிரேமதாசவின்  ஊடாகவே பாரிய மோசடிகள்  இடம் பெற்றுள்ளள.

வீடமைப்பு  மற்றும் நிர்மானத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி  செயற்திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகவே பத்து  மாத காலத்திற்குள மாத்திரம் 3000 இலட்சம் நிதி  செலவிடப்பட்டுள்ளது. 

மக்களின்  வரிப்பணத்தினை தனது அமைச்சின்  பணிகளின்   விளம்பரத்திற்காக  பயன்படுத்தும் எவ்வித அதிகாரங்களும் இவருக்கு  கிடையாது என்றார்.