தமிழர்களுக்கு எவரும் எதனையும் செய்ய மாட்டார்கள் - பிரபா கணேசன்

Published By: Daya

07 Dec, 2018 | 04:49 PM
image

நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்டக்  காரியாலயம் புதிய மூர்வீதியில் இன்று மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகத்தை ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் வைபவ ரீதியாக திறந்து வைத்த பின் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியுள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது? அந்த ஆட்சி எங்கே போனது?அரசியல் அமைப்பை மாற்றித் தருகின்றோம் என்றார்கள்,  சமஷ்டியை தருகின்றோம் என்றார்கள், வடக்கு கிழக்கை இணைக்கின்றோம் என்றார்கள்,  அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம் என்றார்கள், காணாமல்போனவர்களை கண்டுபிடித்துத் தருகின்றோம் என்றார்கள். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. எதுவும் நடக்கவும் இல்லை.

எல்லாம் ஊழல்களாக நடந்து முடிந்துள்ளது.இந்த நல்லாட்சி வந்து மூன்று வருடங்களில் மத்திய வங்கியில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி, ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி, மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி இவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கு சும்மா ஒன்றையும் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் எல்லோரும் இன வாதியாகவே தான் நான் பார்க்கின்றேன். யாரும் தமிழர்களுக்கு எதனையும் செய்யமாட்டார்கள்.

ஆனால் என்னால் முடிந்தவற்றை செய்ய முடியும். ஜனாதிபதியாக இருந்தாலும் சரி,பிரதமராக இருந்தாலும் சரி அவர்களிடம் இருந்து பறித்துக்கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு கொடுக்கக்கூடிய தகுதி என்னிடம் உள்ளது.

வன்னி மாவட்டத்தை பொறுத்தமட்டில் றிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான் போன்றவர்கள் மத்திய அரசாங்கத்திடம் இருந்து சகல விதமான உதவிகளையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய சமூகம் சார்ந்தவர்களுக்கு வழங்குகின்றார்கள். 

எமது வாக்குகளை பெற்றும் இந்த வன்னி மண்ணை ஆண்டு கொண்டிருப்பவர்கள் அந்த அமைச்சர்களே. ஆனால் வன்னியில் தமிழ் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெறுபவர்கள் அந்த அமைச்சர்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் உங்களிடம் வாக்குக் கேட்கின்றார்கள். ஆனால் நீங்கள் வாக்களிக்கின்றீர்கள்.

அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் அபிவிருத்தி செய்து தருகின்றோன் என்று உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. உரிமையை பெற்றுத் தருகின்றோம் என்று தான் வாக்கு கோட்டார்கள். எத்தனை வருடங்கள் போனாலும் பரவாய் இல்லை அவர்கள் உரிமையை பெற்று தரட்டும்.

ஆனால் எமது மக்களுக்கு அடிப்படையாக அபிவிருத்தி தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகள், ஆதரவாளர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22