பாகிஸ்­தானின் முக்­கிய நக­ர­மான லாகூரில் உள்ள குல்­ஷன்-­, இ–-­இக்பால் பூங்­காவில் தற்­கொ­லைப்­படை தீவி­ர­வா­திகள் நடத்­திய வெடி­குண்டு தாக்­கு­தலில் 65 க்கும் மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டதுடன். 200 க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்­பவம் பாகிஸ்­தா­னையே அதிரச் செய்­துள்­ளது. லாகூரின் மையப்­ப­கு­தியில் அமைந்துள்ள இந்த பூங்­காவில் 

ஞாயிற்­றுக்­கிழமை விடு­முறை என்­பதால் மாலை நேரத்தில் குழந்­தைகள்,குடும்­பத்­தி­ன­ருடன் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் கூடி­யி­ருந்­தனர். ஈஸ்டர் திருநாள் என்­பதால் வழக்­கத்­திற்கு அதி­க­மாக கூட்டம் இருந்­தது. எனினும், பூங்­கா­விற்கு வெளிப்­ப­கு­தி­யிலோ அல்­லது உள்­ப­கு­தி­யிலோ எவ்­வித பாது­காப்பும் இல்லை.

திடீ­ரென பயங்­கர சத்­தத்­துடன் சக்­தி­வாய்ந்த வெடி­குண்டு வெடித்­ததால் அப்­ப­குதி முழு­வதும் நிலை­கு­லைந்­தது. பூங்கா முழு­வதும் ரத்த வெள்­ள­மா­கவும், ஆங்­காங்கே உடல்கள் சித­றிக்­கி­டப்­ப­தை­யுமே பார்க்க முடி­கி­றது. இந்த வெடி­குண்டு தாக்­கு­தலில் குழந்­தைகள், பெண்கள் உட்­பட 55 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக முதற்­கட்ட தக­வலில் தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் பலி­யா­னோரின் எண்­ணிக்கை உய­ரக்­கூடும் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

தகவல் அறிந்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் படு­கா­ய­ம­டைந்­த­வர்கள் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­தித்­தனர். அங்­குள்ள மருத்துவமனைகள் அனைத்திற்கும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.