பாடசாலை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இலங்கை புகையிரத திணைக்களத்தால் விசேட புகையிரத சேவைகள் மற்றும் பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த விசேட புகையிரத சேவைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத சேவை கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரைக்கும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன்படி நேர அட்டவணை வருமாறு,

காலை 7.30 மணிக்கு கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் விசேட சேவை இன்று  முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயணம் செய்ய தீர்மானம் எடுக்கப்படுள்ளது. 

இதன் பிரகாரம் பதுளையிலிருந்து கொழும்பு புறக்கோட்டை வரைக்கும் ரயில் சேவை நாளை முதல் ஒருநாள் விட்டு ஒரு நாள் சேவையில் பயணிக்க உள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்  தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் 20 ஆம் திகதி முதல் விசேட பஸ் சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

குறித்த பஸ் சேவையானது  ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை தொடரும் என அதன் தலைவர் ராமால் ஸ்ரீவர்தனே தெரிவித்துள்ளார். 

கிறிஸ்மஸ் பண்டிகை நிமித்தம் அடுத்த மாதம் 15 ஆம் திகதிவரைக்கும் குறுகிய தூர பஸ்கள் சேவை இடம்பெறவுள்ளது. 

குறித்த பஸ் சேவையானது நீர் கொழும்பு-  ஜா எல - வென்னப்புவ ஆகிய பகுதிகளுக்கு குறித்த பஸ் சேவை இடம்பெறவுள்ளது.