பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்ட நாயகன் தமிம் இக்பால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 107 ஓட்டங்களை குவித்து தனது உடற் தகுதியை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின்போது தமிம் இக்பால், மணிக்கட்டில் ஏற்பட்ட முறிவு காரணமாக சிகிச்சை வழங்கப்பட்டு, ஓய்வெடுத்து வந்தார்.

இந் நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கி தனது உடற் தகுதியை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். 

அதன்படி அப் போட்டியில் அவர் 73 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள், 4  ஆறு ஓட்டங்கள் அடங்களாக 107 ஓட்டங்களை குவித்தார். 

இந் நிலையில் மேற்கிந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடரில் தமிம் இக்பால் 11 பேர் கொண்ட பங்களாதேஷ் அணிக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.