சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவாக 1000 கோடி ரூபாவை வசூலிக்கும் என இந்திய சினிமா வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன. 

‘எந்திரன்' படத்தின் 2 ஆம் பாகமான ‘2.0', கடந்த மாதம் 29 ஆம் திகதி  வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. 

இந்தப் படத்தை ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஷங்கர் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார்.

அத்துடன் படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக மாத்திரம் அல்லாது பறவைகளின் ஹுரோவாகவும் வந்து அசத்த, ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

2.0 வெளியாகிய முதல் நாளிலிருந்தே வசூலை அள்ளி வருகின்ற நிலையில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களும் அதிகமாக வரவே, ஒரு வாரம் கடந்தும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது. 

இந்நிலையில், 2.0வின் வசூல் 500 கோடி ரூபாயைத் எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுடன், விரவைாக 1000 கோடி ரூபாவை வசூலித்து விடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இத் திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் சீனாவில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.