யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மோட்டார்ச் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்த நிலையில் வேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தியமையே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மாணவியின் துவிச்சக்கர வண்டியின் பின்புறமாக மோட்டார்ச் சைக்கிள் மோதியுள்ள நிலையில் மாணவி தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்துடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சுமார்-50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் கடும் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் வீதியால் வந்தவர்கள் அவசர அம்பியூலன்ஸ் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்துக் காயமடைந்த மூவரையும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.