(ஆர்.விதுஷா)

நாடுபூராகவும்  இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 430 கிலோ கிராம் 508 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதன்போது 37ஆயிரத்து  304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான்குணசேகர தெரிவித்தார் . 

பொலிஸ் போதைப்பொருள தடுப்பு பிரிவில் இன்று இடம்பெற்ற  ஊடகவியளாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.