அம்பதல  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணி காரணமாக கொழும்பின் சில பாகங்களில் 18மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழைமை மு.ப 11.00 மணிமுதல் மறுநாள் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய  கொழும்பு, புறக்கோட்டை, கல்கிஸை, தெஹிவளை, கொடிகாவத்த, முல்லேரியா, மஹரகம, கொலன்னாவ, கடுவலை, மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களுக்கே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அச் சபை மேலும் அறிவித்துள்ளது.