(நா.தனுஜா)

நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியது.

இப் பூஜை வழிபாடானது நேற்று வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன் தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகியது.