வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (06) அதிகாலை 12 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பதுளை நோக்கி பஸ்ஸில் கேரள கஞ்சாவினை கடத்தி செல்வதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை மாவட்டத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்ததுடன் கைப்பற்றிய கேரள கஞ்சாவினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்