குறைகூறுவதை விடுத்து நாட்டின் எதிர்காலத்தை சிந்திக்கவும் !

Published By: Priyatharshan

06 Dec, 2018 | 06:03 PM
image

(வீ.பிரியதர்சன்)

இலங்கைத் திருநாட்டில் சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் தோன்றி மறைந்தவண்ணமுள்ளன. இவ்வாறு பிரச்சினைகள் தோன்றி எழும்புவதற்கான காரணம் எம்மிடமுள்ள சுயவிருப்புவெறுப்புக்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இதேவேளை, நாட்டுப்பற்றுடன் இதுவரைகாலமும் ஒருசிலர் மிகவும் கஷ்டப்பட்டு நாட்டுக்காக சேவைசெய்தாலும் இவ்வாறு சுயவிருப்புவெறுப்பின் கீழ் இயங்குகின்றவர்களின் செய்பாடுகளால் நாடு பூஜ்ஜிய நிலையையே அடைகின்றது.

அந்தவகையில் நோக்கும் போது யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள்கூட பூர்த்தியடையாத நிலையில் நாட்டில் அரசியல் நெருக்கடியென்ற பூதாகரமான பிரச்சினையொன்று தனியொருவரின் விருப்புவெறுப்புக் காரணமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்காது அதனை இழுத்தடிப்புச்செய்து மேலும் பல சிக்கல்களை உருவாக்கிய நிலையில் நாடு மீண்டும் பூஜ்ஜிய நிலைக்குகொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

தற்போது நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் ஒரு பகுதியான பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் 13 மனுக்கள் மீதான விசாரணை கடந்த 3 நாட்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நாளை தினம் அதற்கான தீர்ப்பு நீதிமன்றினால் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகள் பல கடந்த நாட்களாக இலங்கையின் நிலைகுறித்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ், 

“ இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்டவர்களில் அமெரிக்காவின் விருப்பத்துக்குரியவர் என்று எவருமில்லை. இந்த நெருக்கடி இலங்கை மீதான உலகளாவிய நம்பிக்கையைச் சேதப்படுத்துகின்ற அதேவேளை  பரந்தளவிலான சமூக- பொருளாதார பாதகவிளைவுகளையும் கொண்டுவரக்கூடியதாக இருப்பதால் இலங்கை அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் உடனடியாகத் தீர்வைக்காணவேண்டும்” என்று வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.

இவ்வாறு இலங்கை மீதான உலகநாடுகளின் பார்வை உள்ளநிலையில், நம் நாட்டு அரசியல்வாதிகள் தமக்குள் இருக்கின்ற விருப்புவெறுப்புக்களால் நாட்டின் மகிமையையும் அபிவிருத்திகளையும் பொருளாதாரத்தையும் சீரழித்துக்கொண்டிருப்பதுடன் அரசியல் நெருக்கடி என்ற பூதாகரமான பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு கால அவகாசம் வழங்குகின்றனர்.

இவ்வாறு நாட்டின் அரசியல் நிலமை நீடிப்பதற்கு தற்போதைய அரசியல் தலைவர்கள் புரிந்துணர்வுடன் செயற்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி என்பன கேள்விக்குறியாகும் நிலை தோன்றி, எந்தவகையில் நாட்டின் தலைவர்கள் ஆட்சியை எதிர்காலத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்போகின்றார்கள் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றப்போகும் மாயாஜால அரசியல் தலைவர்களால் இலங்கையை எந்த நிலைக்கு மாற்றமுடியுமென வாக்களித்த மக்களை தற்கால அரசியல் களம் சற்று சிந்திக்கவைத்துள்ளதை எவராறும் மறுக்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் - கன்னட "தக் லைவ்"...

2025-06-13 10:28:21
news-image

சீனாவின் கனிம வள ஆக்கிரமிப்பு :...

2025-06-12 15:26:55
news-image

காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண்...

2025-06-11 16:43:27
news-image

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும்...

2025-06-11 10:39:15
news-image

பொருளாதார பொறுப்புக்கூறலில் இருந்து போர்க்கால பொறுப்புக்கூறலுக்கு

2025-06-11 08:59:03
news-image

பொது இடங்களில் அதிகரிக்கும் புகைத்தல் பாவனை...

2025-06-10 11:57:57
news-image

தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட கணவர்கள் பற்றித்தெரிந்து கொள்ள...

2025-06-10 14:15:05
news-image

வரி சக்தி – புதிய வரிக்...

2025-06-08 16:12:41
news-image

போலந்து தேர்தல் முடிவுகள் உக்ரேன் போரை...

2025-06-08 16:44:18
news-image

மாகாண சபை தேர்தல்: முஸ்லிம் கட்சிகளின்...

2025-06-08 16:43:54
news-image

தென் சூடான் அனுபவம்

2025-06-08 15:27:36
news-image

மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்

2025-06-08 15:20:11