1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மலையகத்தில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

மற்றும் லிந்துலை பொலிஸ் பிரிவு கருக்குப் பட்ட பெரும்பாலான தோட்டங்களில் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

மட்டுக்கலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டுக்கலை மற்றும் கேணர்ஸ் தோட்டங்களின் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், கொழு பொம்மையை ஊர்வலமா ஏந்திச் சென்று மட்டுக்கலை சந்தியில் வைத்து எறியூட்டப்பட்டது.