(நா.தினுஷா) 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக ஜனாதிபதி கூறுவது வேடிக்கையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.  

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை காட்டிக்கொடுத்துள்ளது மாத்திரமல்லாமல் , சுதந்திரகட்சியின் வீழ்ச்சிக்கும் ஜனாதிபதியே காரணம். 

ஆகவே ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களின் எதிர்காலத்தை சிந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிழவடையச் செய்து மீண்டும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை காட்டிக்கொடுத்துள்ளார். 

கட்சியை இரண்டாக உடைத்துவிட்டு இன்று கட்சியை பாதுகாத்துவருவதாக பொய் கூறுகிறார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைத்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு அந்த கட்சியின் வளர்ச்சிபற்றி பேசுவதற்கான உரிமை கிடையாது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர். 

சுதந்திர கட்சி மாதத்திரமல்லாமல் சகல கட்சிகளும் இன்று இக்கட்டான சூழ்நிலைக்கு ஜனாதிபதியால் தள்ளப்பட்டுள்ளன. ஆகவே தொடர்ந்து கட்சிகளை பழிவாங்குவதாக கூறி மக்களையே பழிவாங்கி வருகின்றார். 

மக்கள் மீதான சுமைகளை அதிகரிப்பதை தவிர்த்து விட்டு சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றார். 

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.