(நா.தினுஷா) 

சம்பள உயர்வை வலியுறுத்தி தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆர்பாட்டங்கள் அடிப்படையற்றதும் அரசியல் நோக்கமுடையதுமாகும். ஆகவே அந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி, நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் நிச்சயம் 1000 ரூபா சம்பள உயர்வு வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் 2010 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காகவே 1000 ரூபா சம்பள உயர்வு சம்பந்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

இதனை மையமாக கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களின் சுமையை தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது. தனிப்பட்ட கொள்கைகளுக்காக பெருந்தோட்ட மக்களை பணயம் வைக்க வேண்டம் என்றும் தமிழ் முற்போக்க கூட்டணி வலியுறுத்தியுள்ளது. 

அலரி மாளிகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் , வே. இராதாகிருஷ்ணன் மற்றும் வடிவேல் சுரேஷ் போன்றோரும் கலந்துக்கொண்டிருந்தனர். 

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கண்டவாறு குறிப்பிட்டது.