தொடர்ச்சியாக ஏழாவது வருடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி தொழில்முனைவு நிகழ்சித்திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளன.2018 நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆறு வாரங்களில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

வேகமான வளர்ச்சிப் பாதையை எதிர்பார்த்துள்ள ஆரம்பகட்ட மற்றும் வளர்ச்சியின் முதற்கட்டத்தில் உள்ளவர்கள், புதிய வர்த்தக திட்டங்களைக் கொண்டவர்களை கவரும் நோக்கில் ‘வெஞ்சர் எஞ்சின்’ ஏழாவது வருடமாகவும் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. 2019 ஜனவரி தொடக்கம் பெப்ரவரி நடுப்பகுதி வரையான ஆறு முதல் ஏழு வாரங்கள் வரையான காலப் பகுதியில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. 

இந்த வருடத்துக்கான திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் விண்ணப்பம் பற்றிய விபரங்களை அறிவதற்கு  www.ventureengine.lk  என்ற இணையத்தளத்துக்குச் செல்லவும் அல்லது 0777039889 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

இலங்கை மற்றும் பிராந்திய, சர்வதேச ரீதியில் வியாபித்திருக்கும் வர்த்தக சந்தையில் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்த புத்தாக்கமான மற்றும் அளவிடக்கூடிய வர்த்தக முயற்சிகளை 2018/2019 காலப் பகுதியில் வெஞ்சர் எஞ்சின் கவனத்தில் கொள்ளவுள்ளது.

2018 வெஞ்சர் எஞ்சின் தொழில்முனைவுத் திட்டத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த லங்கன் ஏஞ்சல் நெட்வேர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மனோ சேகரம் “நாம் மீண்டும் ஒருமுறை வெஞ்சர் இஞ்ஜின் திட்டத்தை நடத்தவிருக்கின்றோம். இது ஏழாவது தடவையாகவும் நடத்தப்படுகிறது. முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் பற்றி நாம் தொடர்ந்தும் ஆர்வம்காட்டியுள்ளோம். 

தொழில்முனைவர்களை ஊக்குவிப்பதில் வெஞ்சர் இன்ஜின் முனைப்பானது உயர் தரத்தைக் கொண்டதாகும். கள நிலவரம் மற்றும் எதிர்காலத்துக்கு முகங்கொடுப்பதில் சிறப்புத்தன்மையை வெளிப்படுத்துபவர்களுக்கு அங்கீகாரமாக அமைகிறது” என்றார்.

அவர்களின் ஆரம்ப எண்ணக்கருக்கள் 2018 வெஞ்சர் எஞ்ஜின் தொழில்முனைவுத் திட்டத்தின் உள்நுழைவில் கவனத்தில் கொள்ளப்படும். அதேநேரேம் தொழில்துறையில் நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மைக்கு கணிசமான முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளராக இலங்கையின் முன்னணி வர்த்தக ஏஞ்சல் வலையமைப்பான லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் காணப்படுகிறது. 30ற்கும் அதிகமான ஆரம்பகட்ட வர்த்தகங்களுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. 

வெஞ்சர் எஞ்சின் நிகழ்வு பி.ஓ.வி கப்பிட்டல் மற்றும் இந்தியன் ஏஞ்சல் நெட்வேர்க் ஆகியவற்றினால் ஸ்தாபிக்கப்பட்டது.