பிரான்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களையடுத்து எரிபொருள் விலை அதிகரிப்பை இரத்து செய்ய அந் நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரான்ஸில் கடந்த மூன்று வாரங்களுக்கு முதல் டீசல், எரிவாயு உட்பட எரிபொருட்களின் வி‍லை அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து பாரிஸ் உட்பட முக்கிய நாகரங்களில் பொது மக்கள் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இப் போராட்டமானது வன்முறையாக மாற்றம் பெற்றது. இதனை கட்டுப்படுத்த சென்ற பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் குறித்த வன்முறை காரணமாக பல்வேறு வாகனங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன. 

மூன்று வாரங்களாக நீடித்த இந்த போரட்டத்தினால் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் எட்வர்ட் பிலிப், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் விலை உயர்வினை இரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்து பிரான்ஸில் சுமூகமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.