வவுனியாவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேரைக் கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வனனிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேவிக்கிரமவின் மேற்பார்வையில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்த டி சில்வா தலைமையில் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காரினை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2கிலோ 50கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த காரில் பயணித்த 31, 29, 18, 34, மற்றம் 44 வயதுடைய இளைஞர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.