பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது திருமணத்தை நிர்வாணமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவரே பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். இவர்  தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். 

இவர்களது திருமணம், டிசம்பர் 31-ம் திகதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. திருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், தீபக்கும் நானும் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகிவிட்டோம். எங்களது திருமணத்திற்கு நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்பட பல பாலிவுட் முன்னணி பிரபலங்களை அழைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார். 

மேலும் தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களது திருமணம் நிர்வாணமாக நடைபெறும், திருமண ஆடைக்கு செலவாகும் தொகையை கம்போடியா மற்றும் சோமாலியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவோம் எனக் கூறி, சினியுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் .