தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, ஐக்கிய தேசியக்  கட்சி சட்டத்தின் உதவியைப் பெறச் சென்றாலும்,  நாட்டில் மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கே உள்ளது என கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்காலிக தடையே தவிர,  அமைச்சரவை அமைச்சர்களையோ பிரதமரையோ நீக்கும் செயலல்ல. அமைச்சுக்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட அமைச்சுக்களின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு,  பொதுத் தேர்தலே. ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் ஆதரவைப்  பெறச்சென்றாலும், மக்களின் ஒத்துழைப்பு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினருக்கே உள்ளது.

யார் என்ன சொன்னாலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முக்கிய தீர்வு,  பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதேயாகும் என்றார்.