நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாத நிலையில் பக்கசார்பாக ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பொது மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரசாங்க ஊடகங்கள் மக்களுக்கு நடு நிலைமையாக செய்திகளை வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரை பாராளுமன்றிற்கு அழைத்து ஊடக விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்துமாறும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.