சர்வதேசளவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள திறன்பேசி தொடர்களான OPPO R-வரிசைகள்,மிக விரைவில் இலங்கையில் கால்தடம் பதிக்கவுள்ளது.OPPO R- தொடரானது,வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிகுந்த திறன்பேசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு R1  அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொன்றும் அசைக்க முடியாத அம்சங்களுடன் வளர்ந்து வரும் திறன்பேசி சந்தையில் R- தொடர்களைச் சேர்ந்த 10 கைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.துறைசார் முன்னணி வடிவமைப்பு மற்றும் சிறந்த கமரா அனுபவத்திற்கு புகழ்பெற்ற R- தொடரானது,போட்டிமிக்க திறன்பேசி சந்தையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 2014 இல் R1  இனை அறிமுகம் செய்ததிலிருந்து,OPPO ஆனது வித்தியாசத்தை நோக்கி கடுமையாக செயற்பட்டு வருகிறது.

வடிவமைப்பு

உலோக வர்ணங்கள் மற்றும் கண்ணாடி gradients நிறங்களுடன் அறிமுகம் செய்யபட்ட முதலாவது கைபேசிகளாக R- தொடர்கள் காணப்படுகின்றன. வெள்ளி,தங்கம் மற்றும் பிங்க் நிற தங்கநிறம் என ஒரே விதமான நிறங்களைக் கொண்ட கைபேசிகளினால் சந்தை மூழ்கியிருந்த போது, 2016 இல் OPPO இனால் மிக அழகிய உலோக சிவப்பு நிறத்தில் R9  அறிமுகம் செய்யப்பட்டது.

விசேட FC Barcelona பதிப்பிலுள்ள சிவப்பு மற்றும் நீல நிறக்கலவையினை இதில் பின்பற்றியுள்ளனர். 

அழகியல்சார் கண்கவர்தன்மை மற்றும் நடைமுறை என பிறை வளைவு வடிவிலான வடிவமைப்பினைR11கொண்டுள்ளது. R15  ஆனது,அழகிய மாணிக்கச் சிவப்பு மற்றும் கொஸ்மிக் ஊதா க்ரேடியன்ட் வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

கமரா

R-தொடர்கள் என்பது வெறும் வடிவமைப்பை பற்றிதல்ல. இடைத்தர திறன்பேசிகளில் புகைப்படவியலின் மிகச்சிறந்த அம்சத்தை வெளிக்கொணருவதற்கான திறனை இது கொண்டுள்ளது. 

வழக்கமான புள்ளி மற்றும் கமரா புகைப்படபிடிப்பினை தவறாக்கும் குறைந்த ஒளியில் கூட தௌ்ளத்தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்கான வசதியை R- தொடர்கள் வழங்குகின்றன.

 2013 இல் அதிக கேள்வியைக் கொண்டிருந்த f/2.0 இடைக்கண் லென்ஸ் (aperture lens) உடன் R1 வெளிவந்தது.

 இரட்டை 20MP கமராக்களுடன் அறிமுகமான முதல் கைபேசிகளில் ஒன்றாக OPPO R11 திகழ்கிறது.

கௌரவிப்புகள்

உண்மைத்தன்மை,புரட்சி மற்றும் மீளுருவாக்கம் மற்றும் OPPO இன் புத்துயிர்ப்பு செயல்முறை ஆகியவற்றிற்காக செயற்படும் R- தொடரானது, 2015 இல் R தொடரின் அறிமுகத்திலிருந்து,2015 ஆம் ஆண்டு “மிகவும் மதிக்கப்படும் ஸ்தாபனம்” மற்றும் 2018 இல் மிகச்சிறந்த தொலைத்தொடர்புகள் பயனர் அனுபவ விருது” என அனைத்து மிகப்பெரிய தொலைத்தொடர்பு விருதிகளினாலும் கௌரவிக்கப்பட்டுள்ளது.

OPPO  ஆனது,அதன் R- தொடர்கள் திறன்பேசிகளைப் பொறுத்தவரை அனைத்து சமயங்களிலும் புத்தாக்கங்களை

முயற்சி செய்து பார்ப்பதில் தயக்கம் காட்டியதில்லை.  R- தொடர்கள்,புத்தாக்கம் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான இந் நிறுவனத்தின் விருப்பினை வெளிப்படுத்துகிறது. 

இது பல்வேறு வழிகளில் OPPO இற்கான செயற்படுகிறது.R-  தொடரிலுள்ள அடுத்தடுத்த ஒவ்வொரு திறன்பேசிகளும், அதன் உருவாக்குநரின் ஊக்கத்தை பெறுவதுடன், அதன்பின்னர் உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஆகவேரூபவ்  R- தொடர்களின் அடுத்த திறன்பேசியான OPPO R17 Pro இனூடாக இலங்கையிலுள்ள கொள்வனவாளர்கள் அதிக அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

இது மிகச்சிறந்த வடிவமைப்பு மேம்படுத்தப்பட்ட செயல்பாடு ஆகியவற்றுடன் மிகச்சிறந்த கமரா செயல்பாட்டினையும் குறிக்கிறது.