எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு பஸ் கட்டணங்களையும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் பேச்சுவார்த்தையானது காலை 10.00 மணிக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

இப் பேச்சுவார்த்தையின் போது அனைத்து பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.