வவுனியா வேப்பங்குளம் 7 ஆம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்றிரவு 8.30 மணி தொடக்கம் வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து, வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோடியுள்ளனர். 

வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இவர்களின் நடவடிக்கையின் அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக 8.30 மணிக்கு தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கிய போதிலும் 9.40 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு  பொலிஸார் வருகை தந்திருந்தனர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். 

இவ் விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.