(இரோஷா வேலு) 

உயர் நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்பை விடுத்து வேறு எந்த நீதிமன்றினாலும் வழங்கப்படும் தீர்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மத்திய நிலையத்தில்  இடம்பெற்ற விசேட ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

மேன்முறையீடு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு தொடர்பில் நீதிமன்றை செயற்பாடுகளுக்கு நாம் மரியாதை அளிப்பதினால் அப்பதவிகளில் தொடர்ந்தும் இருந்துக் கொண்டு அதிகாரத்தை மாத்திரம் பயன்படுத்தாமல் செயற்படுவோம். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில் பிரதமராக ரணிலை நியமிக்க கோரி எங்கும் குறிப்பிடவில்லை. 

இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக வந்தாலும் மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றார்.