(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும். அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை காலமும் இத்தகையதொரு குழப்பநிலை ஏற்பட்டதில்லை. எனினும் தற்போது இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படுகின்றதெனின் அதற்கு முறையான உள்ளடக்கங்கள் அற்ற 19ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணமாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

வழக்கு விசாரணைகளுக்காக இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மக்களிடம் செல்வதற்கு எவரும் அச்சமடையத் தேவையில்லை. ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் செல்வதை விடுத்து, முதலில் மக்களின் அபிப்பிராயம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்வர வேண்டும். மக்களிடம் செல்வதற்கு அஞ்சக்கூடாது என்றார்.