(எம்.ஆர்.எம்.வஸீம்)

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலுக்கு செல்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்  என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மேலும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவைத்தவிர வேறு யார் முன்வந்தாலும் பிரதமராக நியமிக்க தயார் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அதனால் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபருக்காக கட்சியின் எதிர்காலத்தை வீணடிக்காமல் வேறு ஒருவரின் பெயரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியமைக்க முன்வரவேண்டும். அதுதான் தற்போதுள்ள நிலையில் புத்திசாலித்தனமான தீர்மானமாகும் என்றார்.