இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியினால் “மகளிர் அபிவிருத்தியும் நிலையான சமாதானமும்” எனும் கருப்பொருளின் கீழ் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பினை பேணிச் செல்வதற்கான தலைமைத்துவ பின்னணியை ஏற்படுத்துதல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பெண்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான பின்னணியை உருவாக்கும் வகையில் இராணுவ தளபதியின் வழிகாட்டலில் குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.